image
RM 20.00

நூலைப் பற்றி... 

திருக்குறளின் வழி, வாழ்க்கையை 
நகர்த்தினால், அது ஓர் உன்னதமான வாழ்வாக அமையும் என்பதில் துளியும் 
ஐயமில்லை. இன்றளவும் அதன் 
விவரங்கள் எளிமையாகவும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்திட 
பலர் முயற்சிக்கிறார்கள். என்னால் 
இயன்றதை செய்ய முற்பட்ட காரியம்தான் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. நான் திருக்குறளில் 
இடம்பெற்றுள்ள அதிகாரங்களை கொண்டு, அதை கதை வடிவில் சொல்லியிருக்கிறேன். தொடக்கமாக 
அறத்துப் பாலில் அடங்கிய 38 அதிகாரங்களை, 38 சிறுகதைகளாக 
எழுதியுள்ளேன். மாணவர் செல்வங்களுக்கும் புரியும்படியும் அமைய வேண்டும் எனும் இலக்கோடு வடிவமைத்துள்ளேன். 


Instructor Biography

அறிமுகம்
மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றிய பாவலர் 
ஐ. இளவழகு அவர்களின் புதல்வர் இள.அருட்குமரன்.
பாவலரின் ‘அகரம்’ இதழில்தான் கவிஞர் அருட்குமரன் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கினார். 

எழுத்துப் பயணம்
1999-ஆம் ஆண்டு முதல், இவர் நிறைய 
கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 
கதைகள் படைத்திருக்கிறார். புதுமை முயற்சியாக ஐம்பூதங்களின் தலைப்பு
களில் கதைகள் மற்றும் ‘குறள் கூறும் 
கதைகள்’ என திருக்குறளைக் கொண்டு கதைகள் எழுதியிருக்கிறார். அகரம் மாத இதழ் இன்றி, மற்ற மாத, வார, தினசரி 
பத்திரிக்கைகளிலும் எழுதியிருக்கிறார். 
2023-ஆம் ஆண்டில், இவர் தனது முதல் 
கவிதைத் தொகுப்பை ‘இன்னொரு நான்’ வெளியிடு செய்துள்ளார். 
தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் 2003-இல் நடத்திய கவிதைப் போட்டியில் 
இரண்டாம் பரிசு வென்றார். 2008-ஆம் 
ஆண்டில் ஆஸ்ட்ரோ வானவில்லின் 
நிகழ்ச்சியான ‘அலாரம்’ சமூக 
நிகழ்ச்சியில் பங்குக் கொண்டார். 2012-
ஆம் ஆண்டில் பேரா திருக்குறள் 
இயக்கம் நடத்திய ‘பாப்புனைவுப் போட்டி’யில் முதல் பரிசு வென்றார். 2020-ஆம் ஆண்டில் ஆர்.டி.எம் ஓளியலை 2
-இல் ‘வசந்தம்’ சமூக நிகழ்ச்சியில் 
பங்குக் கொண்டார். 

Copyright © 2025 MindAppz Sdn Bhd. All rights reserved.